திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே ரெட்டிபாளையம் தம்டகோடி திருமலை அருள்மிகு ஸ்ரீ வள்ளி ,தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி கோவில் அறுபடை வீடு வரிசையில் இடம் பெறுமா என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்..?
தென்னாட்டு சிவனே போற்றி! என்னாட்டவற்கும் இறைவா போற்றி! என போற்றப்படும் சிவமலையான திருவண்ணாமலையின் பெயரை தாங்கிய மாவட்டத்தில் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே ரெட்டிபாளையம் தம்டகோடி மலையில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் அருள்பாலிக்கிறார் இக்திருக்கோவில் ஜவ்வாதுமலை அடிவாரத்திலும், பிரசித்தி பெற்ற நாகநதியின் வடகரையிலும் அமைந்துள்ளது..
மேலும் தற்போது 700 படிகளைக்கொண்டும், இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கோவிலுக்கு செல்ல வசதியாக ரூ 1கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்து பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்யபட்டுள்ளன..
கோவில் கருவறையில் மூலவராகிய சுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் நான்கு கரங்களின் வலது புறத்தில் வேல், அஸ்த, இடது புறத்தில் சேவற் கொடி, அபய அஸ்திரங்களுடன், காலடியில் வலது பக்கம் பார்த்தபடி மயில் வாகனத்துடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்..
கோவில் உட்பிரகாரத்தில் கணபதி, அம்மை -அப்பர், தட்சணாமூர்த்தி, சுமித்ரசண்டேஸ்வரர், மகாலட்சுமி, துர்க்கை, அருணகிரிநாதர் ஆகிய ஏழு பரிவார மூர்த்திகளுக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கபட்டுள்ளன..
சூரியன், சந்திரன், செவ்வாய் உள்ளிட்ட கலை நயத்துடன் நவகிரகங்கள் காணப்படுவது அதிசயமிக்க கோவிலாக காணப்படுகின்றன.
கடந்தாண்டு இறதியில் ரூ 1கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் தங்கத்தால் செய்யப்பட்ட 20 அடி உயர தேர் திருக்குட நன்னீராட்டு செய்யப்பட்டு அதில் உற்சவ சிலைகளை அலங்காரத்துடன் உட்பிரகார வீதி உலா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாட்டிலேயே உயரம் கொண்ட தங்கத்தேர் இந்த கோவிலில் தான் உள்ளன. கோவில் கட்டமைப்பை வானிலிருந்து கழுகு பார்வையில் படம் பிடித்தால் நட்சத்திர வடிவில் காட்சியளிகின்றன.

ஆறுபடைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றில் முருகனை பிரம்மச்சாரியாகவும், தம்பதியராகவும், சன்னியாசிகவும் தரிசிக்கப்படுகிறது..
குன்றுயிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருக்கும் இடமென்று பக்தர்கள் கூறுவது வழக்கம் எனினும் ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூரில் குன்றின் மீது இல்லாமல் கடலோரம் வீற்றிருக்கிறார் ஆகையால் ஆறுபடை வீடுகளில் ரெட்டிப்பாளையம் தம்டகோடி திருமலை வள்ளி தெய்வானை ஸ்ரீ முருகன் கோவில் சேரும் என்பது இந்த பகுதியில் உள்ள பக்தர்களின் ஐதீகமாக உள்ளன..
இந்த கோவிலில் சுப்பிரமணியருக்கு பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், நல்லெஎண்ணெய், விபூதி, அபிஷேகம் செய்யப்படுகிறது. அலரி, ரோஜா, காந்தள், முல்லை, சாமந்தி மலர்களால் தமிழில் அர்ச்சனை செய்யபடுகின்றன. தீப தூப ஆராதனையும், நெய்வேய்தியம் படையலும் வழக்கமாக உள்ளது..
தம்டகோடி மலை சுற்றி 1 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பசுமை நிறைந்த பகுதியாகவும் ஆன்மீகத்திற்கு ஏற்றவாறு இந்த மலை அமைந்துள்ளன.
ஆரணி அருகே உள்ள தம்டகோடி திருமலை வள்ளி தெய்வானை ஸ்ரீ சுப்பரமணியர் ஆலயத்தில் வேண்டுதல் நிறைவேறுமா ஆலயமாக விளங்கி வருகின்றன.