வாலாஜாபேட்டை அருகே அரசு மருத்துவமனை ஐசியு வார்டில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் தாலி கயிற்றில் இருந்த 6 கிராம் நகை மற்றும் விலை உயர்ந்த பல்சர் பைக் திருடி சென்ற வாலிபரை வாலாஜாபேட்டை போலீசார் அதிரடியாக கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்…

வாலாஜாபேட்டை அருகே அரசு மருத்துவமனை ஐசியு வார்டில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் தாலி கயிற்றில் இருந்த 6 கிராம் நகை மற்றும் விலை உயர்ந்த பல்சர் பைக் திருடி சென்ற வாலிபரை வாலாஜாபேட்டை போலீசார் அதிரடியாக கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்…

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அமின் தர்கா தெருவை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மனைவி விமலா (40) இவர் உடல் நலக்குறைவால் வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஐசியூ வார்டு என்பதால் அவர் அணிந்திருந்த தாலி கயிற்றை கழற்றி தனக்கு பக்கத்தில் வைத்து வைத்துக்கொண்டு தூங்கி கொண்டிருந்தார் அப்போது சிறிது நேரம் கழித்து பார்த்தபோது தாலி கயிற்றில் இருந்த குண்டு ஞானகுழாய் என 6 கிராம் தங்க நகை திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்..

இதையடுத்து உடனடியாக வாலாஜாப்பேட்டை காவல் நிலையத்தில் திருடு போன சம்பவம் குறித்து விமலா புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் புகாரை பெற்றுக் கொண்டு விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று காலை காவல் ஆய்வாளர் சாலமன்ராஜா தலைமையிலான போலீசார் கொண்ட குழு சோளிங்கர் செல்லும் சாலையில் அமைந்துள்ள படவேட்டம்மன் கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு முரணான பதிலை கூறியதால் உடனே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவனிடம் தீவிர விசாரணை நடத்தியதில் வாலாஜா சத்யா நகர் பகுதியை சேர்ந்த நந்தகுமார்-30 என்பது தெரிய வந்தது தொடர்ந்து அரசு மருத்துவமனையில் விமலா என்ற பெண்ணின் 6 கிராம் தங்க நகையை திருடியதாகவும் அதேபோன்று வாலாஜா பேருந்து நிலையத்தில் விலை உயர்ந்த பல்சர் இருசக்கர வாகனத்தையும் திருடியதாக போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்து குற்றங்களை ஒப்புக் கொண்டார்..

இதனைத்தொடர்ந்து குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவனிடமிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனம் மற்றும் தங்க நகைகள் என மொத்தம் ரூபாய் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்து அவனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்..

செய்தியாளர் அருள்

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..