ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் கரையோரம் செஞ்சி மன்னரான ராஜா தேசிங் மற்றும் அவரது மனைவி ராணி பாய் ஆகிய இருவரின் நினைவு சமாதி ஆற்காடு நவாப் மன்னரால் அமைக்கப்பட்டது தமிழகத்தில் செஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மாவீரரான தேஜ் சிங் என்னும் தேசிங்கு ராஜா இவா் வீரத்துக்கும், நட்புக்கும், இலக்கணமாக திகழ்ந்து 1714-ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் வீரமரணமடைந்தா் இந்த மரண செய்தியை அறிந்த அவரது மனைவி ராணிபாயும் அவருடன் உடன்கட்டை ஏறி உயிரிழந்தார் இதையடுத்து தேசிங்கு ராஜா மற்றும் ராணி பாய் நினைவாக ராணிப்பேட்டை நகரம் உருவானது..
இந்த நிலையில் ராணிப்பேட்டை நகரம் உருவாக காரணமான இருந்த ராஜா தேசிங்கு மற்றும் ராணி பாய் நினைவு சின்னங்கள் பாலாற்றின் வடகரையில் பல ஆண்டுகளாக சிதலமடைந்தும் புதர் மண்டியும் கிடந்துள்ளது அவற்றை மீட்டு புனரமைத்து பொதுமக்களின் சுற்றுலாத்தலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜா தேசிங்கின் வம்சாவழிகளான தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கத்தின் சார்பில் ராணிப்பேட்டையின் அடையாளமாக திகழும் ராஜா தேசிங்கு மற்றும் ராணிபாயின் சின்னங்களை முழுவதுமாக சீரமைத்து சுற்றுச்சூவர் அமைத்து பொதுமக்களின் பார்வைக்காக கொண்டு வர வேண்டுமென சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு உட்பட துறை சார்ந்த அமைச்சர்கள் என அனைவருக்கும் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையின் போது ராஜா தேசிங்கு மற்றும் ராணிபாயின் நினைவு சின்னத்தை ரூபாய் 2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார்..
இதனைத்தொடர்ந்து 310 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராணிப்பேட்டையின் வரலாற்று அடையாளச் சின்னங்களாக புதுப்பொலிவுடன் பெறப்போகிறது என ராஜா தேசிங்கின் வம்சாவழிகள் அனைவரும் இன்று நினைவு மண்டபத்தில் அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு சிறப்பு பூஜைகளை மேற்கொண்டு நினைவு சின்னத்தை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள சட்டப்பேரவையில் அறிவித்த தமிழக முதல்வருக்கும் துறை சார்ந்த அமைச்சர்களுக்கும் தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சமுதாய மக்களின் சார்பில் மாநில தலைவர் பவானிசிங் உத்தரவின் பேரில் மாநில பொதுச்செயலாளர் பிரகாஷ்சிங் தலைமையில் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் தேவேந்திரசிங், மாநில இளைஞரணி அமைப்பாளர் ரவீந்திரநாத்சிங், பாலாஜிசிங், மணிராம்சிங், ஆகியோர் முன்னிலை பொறுப்பேற்று நன்றிகளும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு இனிப்புகளை கொடுத்து கொண்டாடினார்கள் மேலும் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று முக்கிய வாய்ந்த 10 வரலாற்று சின்னங்களில் ராணிப்பேட்டை ராஜா தேசிங்கு மற்றும் ராணி பாய் நினைவுச் சின்னங்களும் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது..