ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த அனந்தலை மலையில் 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகிறது இந்த குவாரிகளில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஜல்லிக்கற்கள் எம்சான்ட் ஆகியவை சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது இந்த லாரிகள் அனைத்தும் முசிறி கிராமத்தின் வழியாக செல்கிறது அப்போது லாரிகள் வேகமாக செல்லும் போது தூசி பறந்து கிராம மக்களுக்கு டஸ்ட் அலர்ஜி மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு வீடுகளின் மீது ஜல்லி துகள்கள் பறந்து குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது..
எனவே லாரிகள் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாத வகையில் செல்லவும் அதற்கு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முசிறி கிராம மக்கள் 30-க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் இணைந்து அந்த வழியாக வந்த 50 லாரிகளை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர் பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜாப்பேட்டை காவல் ஆய்வாளர் சாலமன்ராஜா தலைமையிலான போலீசார் கொண்ட குழு சாலை மறியல் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் இனிமேல் தூசி பறக்காத வகையில் குறிப்பிட்ட மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் தெளிக்கப்படும் அதேபோல் ஜல்லி துகள்களும் பறக்காத வகையில் பாதுகாப்பான முறையில் லாரிகள் செல்லும் என போலீசார் மற்றும் வருவாய் துறையினர் உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்..
செய்தியாளர் அருள்.