திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கமண்டல நாகநதி ஆற்றங்கரை அருகில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி சமேத
ஸ்ரீ புத்திரகாமேஷ்டீஸ்வரர் ஆலயத்தில் இந்தியாவிலேயே இந்த கோவிலில் தான்
குழந்தை வரம் வேண்டி மஹா யாகம் நடைபெறுவது வழக்கம்.

மேலும் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் குழந்தை வரம் வேண்டி மஹா யாகம் இந்தாண்டு கோவில் வளாகத்தில் பெரிய நாயகி சமேத ஸ்ரீ புத்திரகாமேடீவரர் உற்சவ சிலைக்கு மலர் அலங்காரம் செய்யபட்டு ஏற்கனவே அமைக்கபட்ட குண்டத்தில் முன்னதாக கணபதி ஹோமம் லட்சுமி நவகிரகம் ஹோமம் நடைபெற்றது.

பின்னர் மஞ்சள் குங்குமம் தேன் நவதானியம் உள்ளிட்ட மூலிகை பொருட்கள் கொண்டு குழந்தை வரம் வேண்டி சிறப்பு மஹா யாகம் நடைபெற்றது.
இதில் 500க்கும் மேற்பட்ட தம்பதியினர் கழுத்தில் மாலை அணிந்து யாகத்தில் பங்கேற்று தரிசனம் செய்தனர்…