வருகின்ற ஏப் 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளன.
இதனால் தேர்தல் நடைமுறைகள் பின்பற்றி தேர்தல் ஆணையம் கெடுபிடி விதித்துள்ளன.
இந்நிலையில் ஆரணி டவுன் போலீஸ் ஸ்டேசன் முன்பு போலீசாரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் கோட்டாச்சியர் பாலசுப்பிரமணியன் கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் இந்த கொடி அணிவகுப்பு போலீஸ் ஸ்டேசனிலிருந்து பழைய பேருந்து நிலையம் காந்தி ரோடு மார்க்கெட் வீதி சத்தியமூர்த்தி சாலை உள்ளிட்ட சாலைகளில் போலீசார் இருபக்கமும் அணிவகுப்பு நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் எஸ்.ஐ.சுந்தரேசன், போக்குவரத்து எஸ்.ஐ முத்துலிங்கம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர்.
