சொகுசு வாழ்க்கை கேட்கவில்லை இறந்த சடலங்களை கொண்டு செல்ல வழிபாதை கேட்டு ஆரணி கோட்டாச்சியரிடம் கோரிக்கை மனு.

சொகுசு வாழ்க்கை கேட்கவில்லை இறந்த சடலங்களை கொண்டு செல்ல வழிபாதை கேட்டு ஆரணி கோட்டாச்சியரிடம் கோரிக்கை மனு.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு ஊராட்சிக்குபட்ட ராமநாதபுரம் ஆதிதிராவிடர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

மேலும் இந்த பகுதியில் இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்ய கடந்த 40 வருடங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் இடம் தேர்வு செய்து ஓதுக்கபட்டன.

ஆனால் தற்போது வரையில் தனிநபர் சுடுகாடு பாதை வழியை ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ளதால் இறந்தவர்களின் சடலத்தை விவசாய நிலத்தில் கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளன.

மேலும் இது சம்மந்தமாக பல முறை மாவட்ட நிர்வாகத்திற்கும் கோட்டாச்சியர் அலுவலகத்திலும் புகார் மனு அளிக்கபட்டுள்ளன. ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக எந்த ஓரு நடவடிக்கையும் எடுக்கபடவில்டலை இதனால் மீண்டும் ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஓன்றுணைந்து எங்கள் கிராமத்தில் சொகுசு வாழ்க்கை கேட்கவில்லை இறந்தவர்களின் சடலத்தை கொண்டு செல்ல பாதை வழங்கவும் என கூறி ஆரணி கோட்டாச்சியர் அலுவலகத்தில் கோட்டாச்சியர் உதவியாளர் செந்தில்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ஆரணி அருகே கடந்த 40 ஆண்டுகளாக சுடுகாட்டு பாதை கேட்டு தொடர் மனு அளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..