திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி சிலை அருகே காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் தாவூத் ஷெரிப் தலைமையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ஈ.வி.கே.எஸ். மறைவிற்கு கட்சியினர் அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மெளன அஞ்சலி செலுத்தினர்.
இதில் நகர தலைவர் பொன்னையன், முன்னாள் எம்.எல்.ஏ.ராஜாபாபு, மாவட்ட செயலாளர் உதயகுமார், நகர நிர்வாகிகள் வாசுதேவன் அசோக்குமார், பிரபு, பாபு, சம்மந்தம், மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.