திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ரேணுகாம்பாள் ஆலயத்தில் லட்சக்கணக்கான பக்தர்களின் குலதெய்வம் கோவிலாக படவேடு ரேணுகாம்பாள் ஆலயம் உள்ளது..
இந்த ஆலயத்தில் ஆடி மாதம் வாரம் வாரம் 5 வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாநில மற்றும் மாவட்ட அளவில் லட்சகணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்..
மேலும் ஆடி மாதம் முடிந்து கடந்த மாதம் 23ம் தேதி இந்து அறநிலை துறை திருவண்ணாமலை மண்டல துணை ஆணையர் சிவலிங்கம் தலைமையில் பக்தர்களின் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது உண்டியலில் 61 லட்சத்து 72 ஆயிரம் ரொக்க பணம் 519கிராம் தங்கம் 701 கிராம் வெள்ளி என பக்தர்கள் காணிக்கை அளித்துள்ளனர்.
இதனையொடுத்து மீண்டும் இன்று இந்து அறநிலைத்துறை சார்பில் திருவண்ணாமலை மண்டல இணை இயக்குனர் சிவலிங்கம் தலைமையில் காணிக்கை என்னும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது..