ஆரணி அருகே சிவனை பூஜிக்க குளத்தை உருவாக்கிய பச்சயைம்மன் வரலாறு.

ஆரணி அருகே சிவனை பூஜிக்க குளத்தை உருவாக்கிய பச்சயைம்மன் வரலாறு.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மூனுக்கபட்டு கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைந்த ஸ்ரீ பச்சையம்மன் மிகவும் பிரசித்த பெற்ற கோவிலாக இந்த பகுதியில் விளங்கி வருகின்றன.

இந்த கோவில் ஆரணியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் செய்யாரிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன.

காலை 6.00 மணி முதல் இரவு 8.00 வரையில் கோவில் கருவறை திறந்து இருக்கும்

17ம் நூற்றாண்டில் முன்பு அமைந்ததாக வரலாற்றில் குறிப்பிடகின்றன.

மேலும் மூனுக்கபட்டு கிராமத்தில் உள்ள பச்சையம்மன் கோவில் தான் உண்மையான பச்சையம்மன் மற்ற இடங்களில் அமைந்துள்ள பச்சையம்மன் இதனுடைய எதிர் அம்மனாகவும் இங்கு வரமுடியாத பக்தர்கள் ஆங்காங்கே அமைந்துள்ள பச்சையம்மனை வணங்குவதற்காக அமைக்கபட்டதாகவும் வரலாற்று கூறுகள் தெரிவிக்கின்றன.

வரலாறு

காஞ்சிபுரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சக்தி அம்பாள் செல்லும் போது கால் வலியால் அவதிகுள்ளாகி இந்த இடத்தில் இரவு நேரத்தில் ஓய்வு எடுக்க இருந்தாகவும் சிவன் பெருமானை யாகம் நடத்த தண்ணீர் இல்லாத காரணத்தினால் தன் மகன்களான விநாயகரையும் முருகரையும் தண்ணீர் கொண்டு வர அனுப்பினார். ஆனால் தண்ணீர் கொண்டு வர காலதாமதம் ஏற்பட்டதால் அம்பாளே சிறிய குச்சி எடுத்து ஓரு நதியை உருவாக்கினார்.

அந்த நதி பெயர் கமண்டல நாகநதியாகவும் கணபதி கொண்டு வந்த தண்ணீரை பிரம்ம நதியும் முருகனால் கொண்டு வரப்பட்ட செய்யார் நதியும் இந்த மூன்று நதியும் இணையும் இடம் முக்கூட்டு நதியாகவும் மண்ணால் உருவாக்கபட்ட சிவன் லிங்கம் என அழைக்கபடுகின்றன.

நம்பிக்கை வழிபாடு

ஸ்ரீ பச்சையம்மன் தனிபெருஞ் சக்தியாகவே போற்றபடுவதால் பல பக்த கோடிகளுக்கு குலதெய்வமாக அம்மன் விளங்கி வருகின்றார். குலதெய்வமாக விளங்கும் பக்தர்களுக்கு குழந்தைகளுக்கு மொட்டையடித்து காதுகுத்தி அம்மனுக்கு ஆடு கோழி காவு கொடுத்து மற்றும் சிறப்பு அபிஷேகம் செய்து தங்களுடைய நேர்த்தி கடன் பக்தர்கள் செலுத்துகின்றனர்.

திருமண பாக்கியம் குழந்தை பாக்கியம் கணவன் மனைவி ஓற்றுமையுடன் வாழ ஈர உடையில் அம்மனை வழிபாட்டால நேர்த்தி கடன் உடனடியாக நிறைவேறும் என்பது பக்தர்களின் ஐதீகமாக உள்ளன.

சிறப்பம்சம்

ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் திங்கட்கிழமை அன்று சோமவாரம் என்பதால் இந்த திருதலத்தில் சிறப்பு விழாவாக கருதபட்டு திங்கட்கிழமை அன்று ஆரணி மற்றும் செய்யாரிலிருந்த சிறப்பு பேருந்துகள் இயக்கபடும்.

ஸ்ரீ பச்சையம்மன் ஆலயத்தில் சென்னை வேலூர் பெங்களுர் ஆந்திரா உள்ளிட்ட நகரங்களிலிருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் குவிந்து அம்மனை தரிசனம் செய்து நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.

மேலும் ஆடி மாதம் முழுவதும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும் பச்சையம்மன் என்பதால் பச்சை நிறத்தாலான புடவை பச்சை வளையல் அணிவித்து அம்மனை வணங்கியும் தங்க ஆபரணங்களை அம்மனுக்கு அணிவித்து வணங்கினால் தங்க ஆபரணங்கள் மதிப்பு உயரும் என பக்தர்களின் ஐதீகமாகவும் இங்கு வரும் பக்தர்களுக்கு பச்சை நிறத்திலான பச்சை குங்குமம் பிரசாதமாகவும் கோவில் நிர்வாகம் வழங்கி வருகின்றன.

ஆடி மாதம் தவிர மாதங்களில் திங்கட்கிழமை இந்த ஆலயத்தில் விசேஷமாகவும் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறும்.

வாமுனி செம்முனி

சக்தி அம்பாள் மூனுக்கபட்டு கிராமத்தில் தவமிருக்கும் போது சிவபெருமானும் விஷ்ணுவும் சக்தி அம்பாள் தவத்தை பரிசோதிக்க வாமுனி செம்முனி வேடத்தில் வந்து வாமுனி செம்முனி வந்து இருக்கின்றோம் சக்தி அம்பாளை கூப்பிடு என்று கூறினார்கள்.

சக்தி அம்பாளோ வாமுனி செம்முனி ஆகியோரை வெளியே உட்காரும்படி கூறியதால் வாமுனி செம்முனி வேடத்தில் இருந்த சிவபெருமானும் விஷ்ணுவும் கோபத்தில் அங்கேயே உட்கார்ந்து இருந்தனர். அதனால்தான் அம்மன் கோவில் வளாக வெளியில் வாமுனி செம்முனி சிலைகள் வைக்கபடுகின்றன.

இந்த பச்சையம்மன் கோவில் வெளியில் வாமுனி செம்முனி கோவில் உள்ளது.

இங்கு தேங்காய் எலுமிச்சை பழம் உடைத்து சேவல் ஆடு பலியிட்டு பூஜை நடத்தி வாமுனி செம்முனி வேடத்தில் இருக்கும் சிவபெருமான் விஷ்ணு ஆகியோரை சாந்தபடுவதாக ஜதீகம் இதனால் பக்தர்களை ஏவல் பின்னி சூன்யம் ஆகியவை அண்டாதவாரும் வாமுனி செம்முனி பாதுகாக்கின்றனர்.

உடல்நிலை சரியில்லாத பக்தர்கள் பச்சை நிறத்திலான கயிறை கட்டு கொண்டுடால் நோய் நொடி அகலும் என்றும் பக்தர்களின் ஐதீகமாக உள்ளன.

இந்த பச்சையம்மன் ஆலயத்தின் அருகில் கமண்டல நாகநதி ஆறு கணபதி பிரம்பநதியும் மற்றும் முருகானால் செய்யாற்று நதியும் 3 நதிகள் இணையும் முக்கூற்று நதியாக விளங்கும் இடத்தில் மண்காளல் லிங்கம் ஓன்று தோன்றபட்டது.

மேலும் பல நூற்றாண்டுக்கு முன்பு இந்த பவள பாறையில் அமைந்துள்ள பச்சையம்மன் ஆலயத்தை தமிழக அரசு கடந்த 2012ம் ஆண்டு 5 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கபட்டு இந்த கோவிலில் பக்தர்கள் மொட்டையடிக்க கூடம் அன்னதான கூடம் பொங்கல் வைக்க பக்தர்களுக்கு வசதியாகவும் வாகனங்களங்கை நிறுத்த வசதியாகவும் அமைக்கபட்டுள்ளன.

மேலும் இந்த கோவில் வளாகத்தில் உள்ள பல ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வேப்ப மரத்தில் கன்னி பெண்கள் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் மஞ்சள் கயிறு மற்றும் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் திருமணம் தடை அகலும் என்று பக்தர்களின் முதன்மையான நம்பிக்கையாக விளங்கி வருகின்றன.

மேலும் இந்த ஆலயத்தை சுற்றி முனிவர்களின் சிலைகள் பாதுகாப்பாக வைக்கபட்டுள்ளன.

குடிநீர் பஞ்சமின்றி விளங்கும் ஊர்

கமண்டல நாகநதி பிரம்ம நதி செய்யாற்று நதி ஆகிய ஓரே இடத்தில் சங்கமம் ஆகுவதால் இந்த பகுதியில் குடிநீர் பஞ்சம் இதுவரையில் வரவில்லை என்பது ஒரே இடத்தில் 3 நதிகள் சங்கமம் ஆகுவது இந்த பகுதியில் தனி சிறப்பாக விளங்கி வருகின்றன.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..