திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சுந்தரீகம்பட்டு கிராமத்தில் சேத்பட் ஆரணி சாலையில் உள்ள பெஸ்ட் மெட்ரிகுலேஷன் மற்றும் அல்முபின் நர்ஸரி தொடக்கப் பள்ளிகளில் சுமார் 1500 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
மேலும் சுமார் 1500 மாணவ மாணவிகள் ஓன்றுணைந்து உலக முட்டை தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விதமாக புதிய முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் பள்ளி வளாக மைதானத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட மேஜைகள் அமைத்து சுமார் 1500 மாணவர்கள் ஓரே நேரத்தில் 2500 முட்டையில் வர்ணம் பூசி தலைவர்களின் படம்,மரங்கள்,சமாதான புறா, சூப்பர் மேன்,பிஜியான் பொம்மைகளை வரைந்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் சமூக பாதுகாப்பு குறித்தும் முட்டை உட்கொண்டால் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைக்கும் விதமாக முட்டையில் ஒவியமாக மாணவ மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்க்குள் வரைந்து அசத்தினார்கள்.
இதனை கலாம் புக்ஸ்-ஆப் ரெக்கார்டு என்ற உலக சாதனை நிறுவனம் காணொலி வாயிலாக பதிவு செய்தனர். இந்த சாதனை நிகழ்வில் பெஸ்ட் பள்ளியின் தாளாளர் ஏ.எச். இப்ராஹிம் இயக்குனர். எம்.ஏ.ரியாஸ் அகமது திருமதி. ஷாசியா பர்வீன் பள்ளியின் முதல்வர் எஸ்.நிர்மல் குமார் துணை முதல்வர் நிஷா அல்மூபின் பள்ளி தலைமை ஆசிரியர் திவ்யா மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சாதனை நிகழ்வை கண்டு களித்தனர்…