திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சக்தி நகர் பகுதியில் உள்ள பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
மேலும் வருகின்ற மார்ச் 8ம் தேதி பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்கமுடியும் என்ற நிலைப்பாட்டில் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் ஓன்றுணைந்து தொடர்ந்து சுமார் 8மணி நேரம் சிலம்பம் சுற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இதில் பள்ளி நிர்வாக இயக்குநர் ஷாசியா பர்வீன் ரியாஸ் தலைமையில் மாணவிகள் பெண் ஆசிரியர்கள் ஆகியோர் தொடர்ந்து 8மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்தினார்கள்.
சிலம்பம் சுற்றும் மாணவிகளை உற்சாகபடுத்த பெண்கள் குறித்து பாட்டுகளை போட்டனர். மாணவிகளை உற்சாகபடுத்த பெற்றோர்களும் சிலம்பம் சுற்றினார்கள். இதனை கலாம் புக் அப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிகழ்வாக பதிவு செய்தனர்.
ஏற்கனவே பெஸ்ட் மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் 2முறை உலக சாதனை நிகழ்வை நடத்தினார்கள் என்பது குறிப்பிடதக்கது.