திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் நகராட்சிக்குபட்ட காந்தி ரோடு மார்க்கெட் வீதிசத்தியமூர்த்தி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் உள்ள அசைவ ஓட்டல்களில் விற்பனை செய்யபடும் இறைச்சிகள் தரமற்ற முறையில் உள்ளதாக நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் புகார் அளித்தனர்.
மேலும் தரமற்ற இறைச்சி விற்பனை செய்யபட்டு வருவதாக புகாரின் பேரில் ஆரணி நகராட்சி ஆணையர் குமரன் தலைமையில் அதிகாரிகள் திடிரென அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர்.

அப்போது காந்தி சாலையில் உள்ள ஓரு அசைவ ஓட்டலில் அதிகாரிகள் திடிரென நுழைந்து ரெய்டில் சமையலரையில் கண்டு அதிர்சசியடைந்தனர். உங்கள் வீட்டின் சமையலைறை இப்படிதான் வைத்தீர்ப்பீர்களா எனவும் பிரீஜர் பாக்ஸில் ஏன் இறைச்சியை வைத்துள்ளீர்கள் என பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதால் அசைவ ஓட்டல் உரிiமாயளர் பதிலாளிக்காமல் திக்குமுக்காடினார்.
பின்னர் அசைவ உணவகத்திற்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கபடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆரணியில் ஏற்கனவே அசைவ உணவகத்தில் அசைவ உணவை சாப்பிட்டு சிறுமி மற்றும் மாணவன் இறந்த சம்பவம் குறிப்பிடதக்கது.