திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை மைதானம் எதிரில் ஆரணி தாலுக்கா அலுவலகம் இயங்கி வருகின்றன.
மேலும் இதில் வட்டாச்சியராக இருந்த மஞ்சுளா என்பவர் கடந்த மாதம் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க 10ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறி லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்யபட்டார்.
இதனையடுத்து புதிய தாசில்தாராக சமூக பாதுகாப்பு வட்டாச்சியர் திருமலை என்பவரை மாவட்ட நிர்வாகம் நியமித்து முதல் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்று உடல் நிலை காரணமாக மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார்.
இதனால் ஜமாபந்தி நிகழ்ச்சி முழுவதும் மாவட்ட வழங்கல் அதிகாரி ராமகிரு~;ணன் தலைமையில் நடைபெற்று பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கபட்டன.
பின்னர் செய்யாறு வட்ட வழங்கல் அதிகாரி அசோக்குமார் என்பவரை ஆரணி புதிய பொறுப்பு தாசில்தாராக நியமிக்கபட்டார். ஆனால் அந்த பதவிக்கு அசோக்குமாரும் வருவதற்கு தயங்கி வர மறுத்துள்ளதாக கூறப்படுகின்றன.
ஆரணி உட்கோட்டத்திற்கு வட்டாச்சியர் பதவிக்கு வர அனைத்து அதிகாரிகளும் தயங்குவதால் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் தீர்வு எட்டபட முடியாமல் அனைத்து பணிகளும் தொய்வு ஏற்பட்டு நிலுவையில் உள்ளன.
தற்போது வட்ட வழங்கல் அதிகாரி மூர்த்தி என்பவரை தற்போது ஆரணி வட்டாச்சியர் பொறுப்பு என நியமித்து அறிக்கை வெளியீட்டுள்ளனர். ஆரணியில் அரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் கண்கொத்தி பாம்பாக பார்வையிட்டுள்ளதால் அதிகாரிகள் வர தயங்குகின்றனர்.