புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! ஓலா, ஏத்தர் நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கப்போகும் டிவிஎஸ் எக்ஸானிக்!

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! ஓலா, ஏத்தர் நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கப்போகும் டிவிஎஸ் எக்ஸானிக்!

நாட்டின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தையில் அறிமுகம் செய்யத் தயாராகிறது. இது தொடர்பான ஒரு டீசரையும் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. ஆகஸ்ட் 23 அன்று தங்களின் அனைத்து சமூக வலைத்தளப் பக்கங்களிலும் இந்த டீசரை டிவிஎஸ் வெளியிட்டது.

இதுவரை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த எந்த தகவல்களையும் டிவிஎஸ் நிறுவனம் முழுமையாக வெளியிடவில்லை. எனினும் வீடியோ டீசர் வழியாகவே பல தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது இந்த ஸ்கூட்டர் மணிக்கு 105 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் என்று வீடியோவில் உள்ளது. எனவே புதிய டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிவேகமாக செல்லக்கூடிய திறன் கொண்ட மோட்டார் உடன் வெளியாகும் என எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன. மேலும், இதில் பெரிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் எனர்ஜி 20wh என்று காட்டப்பட்டுள்ளது.

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெயர் Xonic என்று பொறிக்கப்பட்டுள்ளதால், பெயரும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வாகனத்தின் சார்ஜ் 60% விழுக்காடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை வைத்துப் பார்த்தால், டிவிஎஸ் எக்ஸானிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால், சுமார் 100 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம் என்பது உறுதியாகத் தெரிகிறது. இதற்கு முந்தைய டீஸர், ஸ்கூட்டரில் புளூடூத் இணைப்பு இருப்பதை உறுதி செய்திருந்தது.

புதிய டீசர் வெளியீட்டு நிகழ்வின் போது, வரவிருக்கும் ஸ்கூட்டரின் விலை மற்றும் விவரங்களை நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த அறிவிப்பையும் நிறுவனம் வெளியிடவில்லை. செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் இதன் விற்பனை தொடங்கலாம் எனக் கூறப்படுகிறது. பண்டிகை காலத்தில் எலக்ட்ரிக் பைக் சந்தையில் கிடைக்கலாம் என டிவிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..