ஆரணி அருகேஅழகின் பெயர் வாழ்க்கையில் இல்லை அழகானஓடை கிராம மக்களின் குமுறல்.

ஆரணி அருகேஅழகின் பெயர் வாழ்க்கையில் இல்லை அழகானஓடை கிராம மக்களின் குமுறல்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு ஊராட்சிக்குபட்ட அழகானஓடை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் முக்கிய தொழிலாக கறவை மாடு மூலம் பால் விற்பனை மற்றும் விவசாயம் முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர்.

மேலும் இந்த கிராமத்தில் 3தலைமுறைகளாக சுமார் 65 ஆண்டுகளாக அழகானஓடை  கிராமத்திலிருந்து கமண்டல நதியில் ஆற்றில் இறங்கி அலையாபாத் அணையை கடந்து படவேடு செல்லும் அவல நிலையில் கிராம பொதுமக்கள் உள்ளனர்.
இதனால் அழகானஓடை கிராமத்தை சேர்ந்த சிலர் வெள்ளாற்றில் சிக்கி அடித்து செல்லும் நிலையிலும் இதனால் உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளதாக மலைஅடி வாரத்தில் உள்ள பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனையொடுத்து கலசபாக்கம் தொகுதிக்குபட்ட மலைவாரத்தில் சாலையில்லாத நிலையில் தாங்கள் இருப்பதால் தேர்தல் நேரத்தில் தவிர மற்ற நேரங்களில்  அரசியல்வாதிகள் யாரும் எங்களை கண்டு கொள்வதில்லை என்றும் இதனால் இந்தியாவிலேயே இருந்தும் நாங்கள் அகதிகளாக வாழ்ந்து வருவதாகவும் பள்ளி படிப்புக்கு செல்ல கமண்டல நதியை கடந்து செல்லும் தங்களின் பிள்ளைகளை அனுப்பி மீண்டும் திரும்பி வரும் வரையில் தங்களின் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு வாழ்ந்து வருவதாகவும் இதனால் பள்ளி படிப்பை தவிர மேல்படிப்புக்கு செல்ல முடியாத சூழ்நிலை எங்களின் கிராமத்தில் ஏற்பட்டுள்ளன.
மேலும் படவேடு ஊராட்சிக்குபட்ட எங்கள் கிராமம் இருந்தாலும் எந்த ஒரு அடிப்படை வசதியும் எங்களுக்கு செய்து கொடுக்கபடுவதில்லை குடிநீர் மின் இணைப்பு சாலை வசதி எந்த திட்டமும் எங்கள் கிராமத்திற்கு வழங்கபடமால் புறக்கணிக்கபட்டு அகதிகளாவே வாழ்ந்து வருவதாகவும் கூறுகின்றனர்.

இதனால் பல ஆண்டுகாளக எங்கள் கிராமத்திற்கு சாலை வசதி பாலம் அமைக்க கோரியும் கமண்டல நதியின் குறுக்கே பாலம் அமைக்க கோரி மாவட்ட அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தமழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலன் ஆகியோருக்கு கிராம பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். 

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..