ஆரணி அருகே இறந்தவரின் சடலத்தை கொண்டு செல்ல மயான பாதையின்றி விவசாய நிலத்தில் கொண்டு செல்லும் அவலம்

ஆரணி அருகே இறந்தவரின் சடலத்தை கொண்டு செல்ல மயான பாதையின்றி விவசாய நிலத்தில் கொண்டு செல்லும் அவலம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சந்தவாசல் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்தனியாக சுடுகாடுகள் உள்ளன

மேலும் இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டும் இறந்தவர்கள் உடலை கொண்டு செல்ல மயான பாதை இல்லாமல் விவசாய நிலத்தில் இறங்கி சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று சந்தவாசல் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் உடல்நிலை குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை உறவினர்கள் விளைநிலங்களை சேதப்படுத்தி சிரமப்பட்டு கொண்டு சென்றனர்.

இதனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சந்தவாசல் கிராமத்தில் இறந்தவரின் சடலத்தை கொண்டு செல்ல மயான பாதை அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..