காவிரி ஓழுங்காற்று குழுவிற்கு உழவர் பெருந்தலைவர் நாரயணசாமி நாயுடுவின் தமிழக விவசாய சங்க தலைவர் கடும் கண்டனம்

காவிரி ஓழுங்காற்று குழுவிற்கு உழவர் பெருந்தலைவர் நாரயணசாமி நாயுடுவின் தமிழக விவசாய சங்க தலைவர் கடும் கண்டனம்


உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.வேலுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது…

புதுடில்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் கடந்த 18ந் தேதி நடைபெற்றது, இதில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் ஜனவரி மாதத்திற்கு 2.76 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது

மேலும் நடப்பு ஆண்டின் நீர் பாசன கணக்குப்படி கர்நாடகம் இதுவரையில் காவிரியில் 166 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் ஆனால் இதுவரை 75 டிஎம்சி தண்ணீரை மட்டுமே திறந்து விடபட்டுள்ளன மீதமுள்ள 91 டிஎம்சி தண்ணீரை நிலுவையில் வைத்துள்ளது.

மேலும் கர்நாடக அணைகளில் தற்போது போதுமான அளவு நீர் இருப்பினும் கர்நாடகம் தமிழகத்திற்கு காவிரியில் உண்டான பங்கீட்டு நீரை தர மறுக்கிறது, இந்த சூழ்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், நிலுவையில் உள்ள நீரை பற்றி யாதொரு அறிவிப்பும் இல்லாமல், வெறும் கண் துடைப்புக்காக, காவிரியில் ஜனவரி மாதத்திற்கு 2.76 டி.எம.;சி தண்ணீரை மட்டுமே திறக்க காவிரி மேலாண்மை வாரியத்திற்கு, காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளன.

இது ஒரு கண்ணில் வெண்ணெயும் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கும் நடவடிக்கையாக உள்ளது இதனால் தமிழக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இப்படி தொடர்ந்து தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் காவிரி ஒழுங்காற்று குழுவின் செயலுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளன..

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..