திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமத்தில் ராமதாஸ் கிளப் சார்பில் 5ம் ஆண்டு கபாடி போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆரணி எம்.பி தரணிவேந்தன் பங்கேற்று போட்டியில் டாஸ் போட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
மேலும் இதில் ஆரணி சென்னை வேலூர் கிரு~;ணகிரி ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 40 அணிகள் பங்கேற்றன
மேலும் போட்டியினை தொடங்கி வைத்த எம்.பி.தரணிவேந்தன் திடிரென கபாடி களத்தில் இறங்கி கபாடி கபாடி என்று கூவி விளையாடி வீரர்களை உற்சாகபடுத்தினார். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக 20ஆயிரம் 2வது பரிசாக 15ஆயிரம் 3வது பரிசாக 10ஆயிரம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி, மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஏ.எம். ரஞ்சித், ஓன்றிய செயலாளர்கள் மோகன், துரை.மாமது, வழக்கறிஞர் சுந்தர் அன்பழகன் வழக்கறிஞர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதனை ஆரணி சுற்றியுள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று கண்டுகளித்தனர்.