விவசாயிகள் மாதாந்திர குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் அதிகாரிகளை கண்டித்து வேப்பிலை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயிகள் மாதாந்திர குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் அதிகாரிகளை கண்டித்து வேப்பிலை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறை தீர்வு கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

இதில் ஆரணி சுற்றியுள்ள சுமார் 200 கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அப்போது விவசாயிகள் கொடுக்கும் மனுக்கள் மீது அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கையில் வேப்பிலை ஏந்தியபடி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு அதிகாரிகள் மனு மிதான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வேப்பிலை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் ஆரணியில் விவசாய சம்மந்தப்பட்ட கோரிக்கை மனு மீது துறைசார்ந்த அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை

மேலும் விவசாயிகள் அளிக்கும் மனுவை வேப்பிலை கசப்பானதை போன்று அதிகாரிகள் பாவிக்கப்படுகிறனர் இதனால் இன்றும் நடைபெற்ற கூட்டத்தில் கையில் வேப்பிலை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் மீது கவனம் செலுத்தி நாங்கள் அளிக்கும் மனு மீது துறைசார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்…

ஆரணி செய்தியாளர்

ம.மோகன்ராஜ்

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..

Leave a Reply