ஆரணியில் அறிவு சார் மையம் மற்றும் நூலகத்தை அமைச்சர் எ.வ.வேலு திறப்பு.

ஆரணியில் அறிவு சார் மையம் மற்றும் நூலகத்தை அமைச்சர் எ.வ.வேலு திறப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் நகராட்சிக்குபட்ட அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் அரசு நிதி உதவி பெறும் சுப்பிரமணிய சாஸ்தியர் சென்.ஜோசப் கான்வென்ட் உள்ளிட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரியில் சுமார் 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி கல்லூரி படிப்பை முடித்து மாணவர்களின் அறிவை மேம்படுத்தவும் நீட் யூ.பி.எஸ.;சி டி.என்.பி.எஸ.;சி எஸ்.எஸ்.சி ஆர்.ஆர்.பி எஸ்.எஸ்.சி உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் மாணவர்கள் பயிற்சி பெற வேலூர் காஞ்சிபுரம் பெங்களுர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பயிற்சி வகுப்பில் படித்த வருவதால் மாணவர்கள் மிகவும் சிரமத்துகுள்ளாயி வருகின்றனர்.
இதனால் மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் விதமாக 

மாணவர்களின் நீண்ட நாட்களான கோரிக்கையை ஏற்கும் விதமாக ஆரணி நகராட்சி சாலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவுசார் மையம்  1கோடியே 88லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கபட்டு பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலை சிறுதுறைமுகம் துறை அமைச்சர் எ.வ.வேலு குத்துவிளக்கு ஏற்றி வைத்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

இதில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்~pனி நகராட்சி ஆணையர் குமரன் வட்டாச்சியர் மஞ்சுளா முன்னாள் எம்.எல்.ஏ சிவானந்தம் ஆரணி தொகுதி பொறுப்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன் மாவட்ட பொறுப்பாளர் தட்சிணாமூர்த்தி   மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி ஓன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் சுந்தர் மோகன் துரை.மாமது மேற்கு ஆரணி ஓன்றிய சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தன் ஓன்றிய துணை சேர்மன் கே.டி.ராஜேந்திரன் மாவட்ட கவுன்சிலர் அருணா குமரேசன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஞ்சித் மாவட்ட அணியை சேர்ந்த அமைப்பாளர்கள் சாந்தகுமார் பு~;பராஜ் அமர்~ரிப் அப்சல்பா~h மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.  

மேலும் இந்த நூலகம் 4500 சதுர அடியில் கட்டிடம் அமைந்துள்ளன. கீழ் தளத்தில் 60 நபர்கள் முதல் தளத்தில் 20 நபர்கள் அமர்ந்து ஓரே நேரத்தில் புத்தகங்களை வாசிக்கலாம். போட்டி தேர்வுக்கு மாணவர்கள் தயாராக விதமாக பொது அறிவு உள்ளிட்ட சுமார் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. 16 கணினிகள் 75இன்ச் எல்.இ.டி டிவி இணையதள வசதி புரொஜக்டர் வசதியுடன் கூடிய கூட்ட அரங்கு ஆண் பெண் இருபாலருக்கும் கழிவறை வசதி குடிநீர் வசதி குழந்தைகளுக்கான வசதிகள் உள்ளன. தினமும் காலை 8.00மணி முதல் மாலை 6.00 மணி வரையில் திறந்திருக்கும் 16 சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட்டு கண்காணிக்கபடும் இதனால் ஆரணியில் மாணவர்கள் போட்டி தேர்வு எழுதுபவர்கள் பயனடையலாம். அனுமதி இலவசம் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்தன.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..