செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 05,திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் செலவு கணக்குகள் இறுதி ஒத்திசைவு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.அ.ப அவர்கள் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர் திரு.சந்தோஷ் சரண் இ.வ.ப அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தேர்தல் செலவின கணக்குகளை முடிக்கப்பட வேண்டும். திருபெரும்புதூர் மக்களவை தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உள்பட 31 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இந்நிலையில் வேட்பாளர்களின் தேர்தல் கணக்குகளை இறுதி ஒத்திசைவு கூட்டத்தில் வேட்பாளர்கள் கலந்து கொண்டு தங்களது இறுதி தேர்தல் கணக்குகளை உரிய படிவங்களில் ஒப்படைத்தனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) திரு.வே.நாகலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.சுப்பிரமணி, உதவி தேர்தல் பணியாளர்கள் குழுவினர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்
செய்தியாளர்-சூர்யாராஜன் செங்கல்பட்டு