திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தச்சூர் ஊராட்சிக்குபட்ட சமத்துவபுரம் பகுதியில் கடந்த 1998ம் ஆண்டு சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கபட்டன.
மேலும் இந்த குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களுக்கு தனி வீட்டு மனை பட்டா உட்பிரிவு வழங்க கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் தற்போது 26 ஆண்டுகளாக பட்டா உட்பிரிவு செய்து கணினியில் பதிவு ஏற்றம் செய்யாமல் ஓரே பட்டா எண்ணில் உள்ளதால் சிரமமாக உள்ளதாக சமத்துவபுரம் பகுதி குடியிருப்பு வாசிகள் கூறினார்கள்.
இதனால் பல முறை கோரிக்கை மனு அளித்தும் எந்த ஓரு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை இதனால் ஆத்திரமடைந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஓன்றுணைந்து ஆரணி கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோட்டாச்சியர் உதவியாளர் செந்தில்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுக்களை பெற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.