களத்தில் சிங்கம் உண்மையில் குழந்தை மனசு பயிற்சியின் போது நாய்க்குட்டியை கொஞ்சிய கிங் கோலி – வீடியோ வைரல் களத்தில் சிங்கம் உண்மையில் குழந்தை மனசு

களத்தில் சிங்கம் உண்மையில் குழந்தை மனசு பயிற்சியின் போது நாய்க்குட்டியை கொஞ்சிய கிங் கோலி – வீடியோ வைரல் களத்தில் சிங்கம் உண்மையில் குழந்தை மனசு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் சுற்றில் மிக முக்கியமான ஆட்டமாக ஞாயிற்றுக்கிழமை இந்தியாவும் பாகிஸ்தானும் பல பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இந்த ஆட்டத்திற்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிப்பு வெளியாகி உள்ளன.

மேலும் ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் எடுத்த இந்த முடிவுக்கு வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.அது என்ன இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்திற்கு மட்டும் முக்கியத்துவம் தருவதாக என்ற பிரச்சினையை தற்போது எழுந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இலங்கை கொழும்புவில் மாலை நேரத்தில் இந்திய அணி வீரர்கள் பீல்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்கள்.

இந்த பயிற்சிக்கு முன்பு வார்ம் அப் செய்வதற்காக வீரர்கள் கால்பந்து ஆட்டத்தில் விளையாடுவது வழக்கம். அப்போது மைதானத்தில் ஒரு நாய்க்குட்டி இந்திய வீரர்களை சுற்றிக் கொண்டு நின்றது. அப்போது அந்த நாய்க்குட்டியை பார்த்த விராட் கோலி அதனை செல்லமாக அழைக்க அது அழகாக வாளை ஆட்டிக்கொண்டு விராட் கோலிவிடம் தஞ்சம் புகுந்தது… இதனையொடுத்து அந்த நாய்க்குட்டியை விராட் கோலி பாசமாக கொஞ்சினார். பின்னர் வீரர்கள் நாய்க்குட்டியுடன் கால்பந்து விளையாட தொடங்கினர்.

விராட் கோலி அடித்த பந்தை அந்த நாய்க்குட்டி பிடிப்பதற்காக ஓடி சென்றது. இதன் வீடியோ தற்போது சமூக வளைதலங்களில் வைரலாகி வருதை கண்ட ரசிகர்கள் களத்தில் கோலி சிங்கமாகவும் உண்மையில் கோலி மனசு குழந்தைங்க என ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்..

செய்தியாளர் சு.ஞானப்பண்டிதன்

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..