ஆரணி அருகே அரசு பள்ளி பவள விழாவில் நடிகர் தாமு பெற்றோர்களை பற்றி
மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்து பேசிய போது அரங்கில் மாணவ மாணவிகள்
கதறி அழுத சம்பவம் பார்த்த பெற்றோர்கள் ஆசிரியர்கள் கண்ணீர் விட்டு அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் பேரூராட்சி பேருந்து
நிலையம் அருகில் தனியார் மண்டபத்தில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள்
மேல்நிலைப்பள்ளி 75வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு பெற்றோர் ஆசிரியர்
கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு ஆகியோர் சார்பில் பொது தேர்வு எழுதும்
10, 11, 12, ஆகிய வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை கொண்டாடுவோம் கல்வி
விழிப்புணர்வு பயிலரங்க விழா கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி
கோவர்தன் குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.
இதில் நடிகர் தாமு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
மேலும் அரசு பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு 11, 12ம் வகுப்பு
மாணவர்களுக்கு பொது தேர்வு அச்சத்தை போக்க விழிப்புணர்வு நகைச்சுவையுடன்
கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நடிகர் தாமு தனது பலகுரலில் பேசி மாணவ மாணவிகள் மத்தியில் பேசி அசத்தினார்.
பின்னர் மாணவ மாணவிகள் பொது தேர்வில் மனஅழுத்தத்தை போக்கி மனவலிமையுடன் தேர்வுகள் எழுதவும் யோசனை வழங்கினார்.
பின்னர் பள்ளி மாணவ மாணவகளிடம் நடிகர் தாமு தங்களின் பெற்றோர்கள் தங்களை பாதுகாக்கவும் படிக்க வைக்க படும் கஷ்டங்களை வித்தியாசமான முறையில் எடுத்துரைத்த போது கூட்ட அரங்கில் இருந்த மாணவ மாணவிகள் தங்களை கட்டுபடுத்த முடியாமல் கதறி அழுதனர்.
இதனை கண்ட பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையாளர்கள் அனைவரும்
கண்ணீர் விட்டு அழுதனர்.
பின்னர் மாணவ மாணவிகள் தற்போது தங்களை
சுற்றியுள்ள நல்ல நட்புகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்றும் நடிகர் தாமு
மாணவ மாணவிகள் முன்னிலையில் எடுத்துரைத்து பேசினார்.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள்
பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.