கண்ணமங்கலம் வேம்புலியம்மன் கோவில் திருவிழா 100 அடி உயரம் அந்தரத்தில் தொங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி – வேடிக்கை பார்க்கும் கண்ணமங்கலம் போலீசார்…!!

கண்ணமங்கலம் வேம்புலியம்மன் கோவில் திருவிழா 100 அடி உயரம் அந்தரத்தில் தொங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி – வேடிக்கை பார்க்கும் கண்ணமங்கலம் போலீசார்…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் புதுப்பேட்டை சக்தி நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வேம்புலியம்மன் ஆலயத்தில் 15ம் ஆண்டு கூழ்வார்க்கும் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கண்ணமங்கலத்தில் உள்ள கமண்டல நாகநதி ஆற்றின் அருகே உள்ள ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்திலிருந்து ஸ்ரீ வேம்புலியம்மன் உற்சவ சிலைக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கபட்டு கண்ணமங்கலம் பஜார் வீதியில் வீதி உலா வந்தன.

மேலும் இதில் பக்தர்கள் வாசல் கால் ஜேசிப கிரேன் டாடா ஏசி உள்ளிட்ட கனரக வாகனங்களில் அந்தரத்தில் தொங்கியபடியும் கட்டை கட்டி ஆடுதல் உள்ளிட்டவைகள் தங்களின் நேர்த்தி கடன் செலுத்தினார்கள். 

இதில் ஜேசிபி கிரேனில் பக்தர்கள் சுமார் 100அடி உயரம் அந்தரத்தில் பறந்து ஆபத்தான முறையில் தொங்கியபடி வந்ததால் பக்தர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் 100அடி உயரம் ஆபத்தான முறையில் தொங்கியபடி அம்மனுக்கு மாலை அணிவித்தனர். பின்னர் குழந்தை வரம் வேண்டிய தம்பதியினர்களுக்கு எலுமிச்சை பழம் பிரசாதமாக வழங்கபட்டன. 

இதனையடுத்து அந்தரத்தில் ஜேசிபி கிரேன் மூலம் அந்தரத்தில் தொங்கியபடி பக்தர்கள் ஊர்வலம் வந்த சம்பவத்திற்கு வருவாய் துறை மற்றும் காவல்துறையினரிடம் கேட்டதற்கு அரசு விதிமுறைகளின் படி 30அடி உயரம் வரையில் அனுமதி வழங்கபட்டுள்ளன. 

ஆனால் 100அடி உயரம் என்பதால் நிச்சியமாக வழக்கு பதிவு செய்து கோவில் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்று வருவாய் துறையினர் கூறினார். 

திருவிழாவிற்கு கண்ணமங்கலம் உதவி ஆய்வாளர் கார்த்திக் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றசாட்டினார்கள். இது சம்மந்தமாக நமது நிருபர் குழு உதவி ஆய்வாளர் கார்த்திக்கிடம் தொலைபேசி வாயிலாக கேட்டதற்கு : காலம் காலமாக நடைபெற்ற திருவிழாவில் கடந்த முறை அனுமதி மறுக்கபட்டன 

இதனால் என் மீது காழ்புணர்சி ஏற்படும் என்பதால் இதனை நாங்கள் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை 30அடி உயரத்தில் தான் பக்தர்கள் தொங்கியபடி ஊர்வலமாக வந்ததாக உதவி ஆய்வாளர் கார்த்திக் கூறினார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுக்கா கீழ்வீதி பகுதியில் கெங்கையம்மன்  திருவிழாவில் கிரேன் அறுந்து விழுந்து பக்தர்கள் இறந்த சம்பவம் குறிப்பிடதக்கது. மக்களை காப்பாற்ற வேண்டிண காவல்துறை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனைகுரிய வி~யமாக உள்ளன

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..