50ரூபாய் கட்டணத்திற்கு அடியாட்டுகள் மூலம் 300 வசூல்..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள தேப்பனந்தல் கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக வாரந்தோறும் சனிக்கிழமை தேப்பனந்தல் ( கேளுர் ) கூட்ரோடு அருகில் உள்ள மைதானத்தில் மாட்டு சந்தை நடைபெற்று வருகின்றன.
மேலும் இந்தியா சுதந்திரம் பெற்று 2 ஆண்டுகளுக்கு பின்பு அதாவது 1949ம் ஆண்டு முதல் தேப்பனந்தல் மாட்டு சந்தை நடைபெற்று வருவதாகவும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது கேளுர் தேப்பனந்தல் மாட்டுச்சந்தை மட்டும் நடைபெற்று வருகின்றன. இந்த மாட்டு சந்தையில் ஜெர்சி களர் நாட்டு மாடு உள்ளிட்டவைகள் விற்பனைக்கு வருகின்றன.
இந்த மாட்டு சந்தையில் வேலூர் கிரு~;ணகிரி தர்மபுரி விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரா கேரளா உள்ளிட்ட மாநிலத்திலிருந்தும் மாடுகள் இறக்குமதி செய்யபட்டு விவசாயிகள் வியாபாரிகள் மாடுகளை வாங்குவதற்கும் விற்பனை செய்யபடுவதற்கும் இந்த தேப்பனந்தல் மாட்டு சந்தையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்…
இந்நிலையில் தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் நாள் ஓன்றுக்கு கோடி வரையில் வியாபாரம் வர்த்தகம் நடைபெற்று வரும் மற்ற நாட்களில் பிரதி சனிக்கிழமை தோறும் நாள் ஓன்றுக்கு லட்ச கணக்கில் வியாபார வர்த்தகம் நடைபெறுவது வழக்கமாகும்.
ஆண்டு ஓன்றுக்கு கேளுர் பஞ்சாயத்து சார்பில் முன் அறிவிப்பு செய்து பஞ்சயாத்து அலுவலகத்தில் பகிரங்கமாக ஏலம் விடபடும். கடந்த 5 ஆண்டுகளாக போளுர் பகுதியை சேர்ந்த பழனி என்பவர் ஏலம் எடுத்து வருவதாகவும் கடந்த வருடம் 55லட்சத்திற்கு ஏலம் எடுத்து நடத்தி வந்துள்ளார்.
இதனையொடுத்து பழனி என்பவர் தற்போது ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா அன்பழகன் துணை தலைவர் தாமரை செல்வி உள்ளிட்ட 9வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலர் அசோக்குமார் உள்ளிட்ட சில அதிகாரிகளை கையில் போட்டு கொண்டு இந்த வருடம் ஏலம் நடைபெறாமல் இருக்க தலைவர் துணை தலைவர் செயலர் உள்ளிட்ட கிராமத்தில் உள்ள முக்கிய புள்ளிகளை (ப ) வைட்டமின் அள்ளி வீசி ஏலம் எடுக்கின்ற நேரத்தில் தனது ஆதரவாளர்களை பழனி இறக்கிவிட்டு தனது முழு கட்டுபாட்டில் ஏலத்தை நடத்தி 30லட்சத்து 3ஆயிரம் ரூபாய் பழனி பெயரில் எடுத்துள்ளார். கடந்த ஆண்டை விட தற்போது 20 லட்சம் ரூபாய் கேளுர் ஊராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பீடு செய்துள்ளது அப்பாட்டமாக தெரிய வந்துள்ளன.
இதனையொடுத்து விதிமுறைகள் படி மாடு ஓன்றுக்கு 50ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டும் ஆனால் ஏலம் எடுத்த நபர் பழனி அடியாட்களை கொண்டு டாடா ஏசி வாகனத்திற்கு 200ரூபாயும் மாடு ஓன்றுக்கு 250 முதல் 300 ரூபாய் வரையில் வசூலிக்கின்றனர். வெளியூர்களிலிருந்து வரும் மாட்டு வியாபாரிகளை அடியாட்களை கொண்டு மிரட்டுவதும் தாக்குவதும் போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இது சம்மந்தமாக மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம பொதுமக்கள் பாதிக்கபட்டவர்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் கையூட்டு பெற்று கொண்டு கண்துடைப்புக்கு விசாரணை என்ற பெயரில் எந்த ஓரு நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லை என்பதால் பழனி தலைமையில் அடியாட்கள் அராஜகம் அட்டூழியுங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ முதல்வர் உடனடியாக தலையீட்டு அராஜகத்தில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கவும் அராஜகத்திற்கு துணை போகும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கேளுர் கிராம பொதுமக்கள் மற்றும் மாட்டு வியாபாரிகள் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளன.