திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கடந்த 18.07.23 அன்று பல்வேறு நலதிட்ட உதவிகள் மற்றும் ஜமுனாமுத்தூர் மலைப்பகுதியில் கோடை விழா தொடக்க விழாவில் பங்கேற்க விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
மேலும் ஜமுனாமுத்துர் பகுதியில் கோடை விழாவை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கினார். இதனையொடுத்து போளுர் டவுன் பேருந்து நிலையம் அருகில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 8அடி உயரமுள்ள வெண்கல சிலை திறக்கும் நிகழ்வு பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிமோட் கன்ட்ரோல் மூலம் கலைஞர் சிலையை திறந்து வைத்து கலைஞரின் திருவுறுவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையொட்டி பல்லாயிரகணக்கான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கைகுலுக்கி ஆரவாரம் செய்தனர்..
செய்தியாளர் ஏ.பசுபதி