திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 5 கோடியே 57 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 111குடியிருப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்ததை
ஆரணியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் மஞ்சுளா அனைவரையும் வரவேற்றார்.
வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமை தாங்கினார்
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கலந்து கொண்டார்
மேலும் 5 கோடியே 57 இலட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்ட 111குடியிருப்புகளை ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி குடியிருப்பு சாவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வழங்கினார்.

மேலும் குடியிருப்புகளை முறையாக பராமரிக்க அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து பயனாளிகளுக்கு சமையல் பாத்திர தொகுப்பு பெட்டகம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் ஏ.சி. மணி முன்னாள் எம்.எல்.ஏ.சிவானந்தம் மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன் சுந்தர் துரைமாமது மோகன் மேற்கு ஆரணி சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன் துணை சேர்மன் ராஜேந்திரன் இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித் மாவட்ட பிரதிநிதிகள் பாலமுருகன் முள்ளிபட்டு ரவி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் திமுக நிர்வாகிகள் இலங்கை தமிழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..
செய்தியாளர் சு.ஞானப்பண்டிதன்