வந்தவாசி அருகே ஸ்ரீ தவளகிரி மலை கோவிலில் ஆறு மாதத்திற்கு முன்பு 34 வயது இளம் பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் கணவனே தன் மனைவியை கொலை செய்து மலையின் படிக்கட்டு பகுதியில் வீச்சு 6 மாதத்திற்கு பின்பு கணவன் கைது..

வந்தவாசி அருகே ஸ்ரீ தவளகிரி மலை கோவிலில் ஆறு மாதத்திற்கு முன்பு 34 வயது இளம் பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் கணவனே தன் மனைவியை கொலை செய்து மலையின் படிக்கட்டு பகுதியில் வீச்சு 6 மாதத்திற்கு பின்பு கணவன் கைது..

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் ஸ்ரீ தவளகிரி மலைக்கோவிலில் ஆறு மாதத்திற்கு முன்பு 34 வயது இளம் பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் கணவனே தன் மனைவியை கொலை செய்து வீசி சென்ற சம்பவத்தில் 6 மாதத்திற்குப் பின்பு கணவன் கைது செய்யப்பட்டார்..

வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் ஸ்ரீ தவளகிரி மலைக்கோவில் உள்ளது இந்த மலைக்கோவிலின் படிக்கட்டு அருகே ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி அன்று 34 வயது இளம் பெண் கழுத்து நெருக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டது பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் யாராவது கொலை செய்து வீசி சென்றார்களா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்தனர்.

நீண்ட நாட்கள் ஆகியும் இளம் பெண்ணின் உறவினர்கள் வராத காரணத்தால் காவல்துறையினர் இளம்பெண்ணின் புகைப்படத்தை வைத்து வந்தவாசி சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் காஞ்சிபுரம் வேலூர் பாண்டிச்சேரி மற்றும் ஆந்திரா மாநிலம் சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் 40 என்பவரின் மனைவி நித்தியா வயது 34 என்பவர் கடந்த 8 மாதம் 18ஆம் தேதி தன்னுடைய மனைவி காணவில்லை என்று 9 மாதம் 13ஆம் தேதி சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் சீர்காழி காவல் நிலைய போலீசார் நித்தியாவின் புகைப்படத்தை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது புகைப்படம் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் சென்று இருந்த நிலையில் வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் நித்தியாவின் புகைப்படத்தை பார்த்தவுடன் ஏற்கனவே ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ தவளகிரி மலைக்கோவிலில் படிக்கட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட இளம் பெண்ணின் புகைப்படம் ஒன்றாக இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து போலீசார் விசாரணை செய்ததில் இறந்த இளம் பெண்ணின் பெயர் நித்தியா என்றும் இவர் வந்தவாசியை சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரிய வந்தது பின்னர் நித்தியாவின் தாய் சாந்தி தொலைபேசி மூலம் ஜெயராமனை வந்தவாசிக்கு வரவேண்டும் என்று அழைத்த போது ஜெயராமன் புதிய பேருந்து நிலையம் சந்திப்பில் பேருந்தில் இருந்து ஜெயராமன் இறங்கும்போது போலீசார் ஜெயராமனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர் அப்போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

மேலும் போலீசார் விசாரணையில் நித்யாவிற்கும் சீர்காழியில் வசித்து வந்த ஜெயராமனுக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது என்றும் இவர்களுக்கு 11 வயது மகன் ஒருவர் உள்ளார் என்றும் மேலும் ஜெயராமன் சீர்காழியில் மளிகை கடை நடத்தி வருகிறார் என்றும் நித்யாவுக்கும் ஜெயராமனுக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டதன் காரணமாக நித்தியா வீட்டை விட்டு வெளியே செல்வதும் மீண்டும் வீட்டிற்கு வருவதும் இருந்து வந்துள்ளார் இந்த நிலையில் கடந்த 4 மாதம் 16ஆம் நித்தியா வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீட்டிற்கு வரவில்லை பின்னர் 17ஆம் தேதி ஜெயராமனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் வந்தவாசியில் இருக்கிறேன் என்னை வந்து அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார் இதை அடுத்து ஜெயராமன் வந்தவாசிக்கு வந்தவுடன் நித்தியா ஜெயராமனை அழைத்துக் கொண்டு வந்தவாசி அருகே உள்ள வெண்குன்றம் ஸ்ரீ தவளகிரி மலை கோவிலுக்கு சென்றுள்ளனர் அப்போது ஏற்பட்ட தகராறு காரணமாக ஜெயராமன் நித்யாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்றதாகவும் விசாரணையில் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் ஜெயராமனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..