ஆரணியில் காலை முதலே லேசான கனமழையால் பேருந்து நிலையங்கள் வெறிசோடி காணப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

ஆரணியில் காலை முதலே லேசான கனமழையால் பேருந்து நிலையங்கள் வெறிசோடி காணப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்ககடலில் நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்ய கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துருந்தன.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சேவூர் முள்ளிபட்டு இரும்பேடு கண்ணமங்கலம் சந்தவாசல் உள்ளிட்ட பல கிராமங்களில் நேற்று இரவு முழுவதும் மழை பெய்து வருகின்றன. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளிக்கபட்டுள்ளன.

இது மடடுமின்றி தொடர் மழை காரணமாக ஆரணி பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிசோடி காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளன.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..