திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அண்ணா சிலை அருகே நடைபெற்ற கடந்த 22-ம் தேதி நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்ட இந்து முன்னனி கோட்ட தலைவர் மகேஷ் பேசும் போது : திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து இழிவாக பேசியதாகவும் நடிகையுடன் இணைத்து பேசியதாக கூறி ஆரணி திமுக நகர செயலாளர் ஏசி.மணி ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் ஆரணி காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள இந்து முன்னனி கோட்ட தலைவர் மகேஷ் என்பவரை அவரது வீட்டில் வைத்து கைது செய்து தற்போது சந்தவாசல் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனையொடுத்து இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் காண மாவட்ட செயலாளர் தாமோதரன் தலைமை 50க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் சந்தவாசல் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டுள்ளனர்.
மேலும் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மற்றும் ஆரணியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்
