திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் போலீசாருக்கு ரகசிய தகவலின் அடிப்படையில் வாகனத்தில் தமிழ அரசால் தடை செய்யபட்ட போதை வஸ்துக்கள் கடத்தி வரப்படுவதாக புகாரின் பேரில் ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் போலீசார் ஆரணி டவுன் சைதாப்பேட்டை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
மேலும் அப்போது ஆட்டோவை மடக்கி பிடித்து போது ஆட்டோவில் சுமார் 3 லட்சம் மதிப்பிலான 15 மூட்டை கொண்ட கூலிப் ஹான்ஸ் போன்ற போதை வஸ்துக்கள் இருந்துள்ளதை ஆட்டோவுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் விசாரணையில் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த மளிகை கடைகாரர் நடராஜன் என்பவர் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்துள்ளதாகவும் தெரிய வந்தன.
இதனையொடுத்து மளிகை கடைகாரர் நடராஜனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் போதை வஸ்துக்களை ஆரணி பகுதியில் வசிப்பவர் தேவாரம் என்பவர் மூலம் பெறப்பட்டுள்ளதால் தேவாரம் மற்றும் உடந்தையாக செயல்பட்ட பரத் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.