ஆரணி அருகே நாட்டு நல பணி திட்டத்தின் கீழ் சிலம்பம் பயிற்சியில் ஈடுபட்ட மாணவிகள்.

ஆரணி அருகே நாட்டு நல பணி திட்டத்தின் கீழ் சிலம்பம் பயிற்சியில் ஈடுபட்ட மாணவிகள்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இலுப்பகுணம் மற்றும் மழையூர் ஆகிய கிராமத்தில் உள்ள ஊராட்சி ஓன்றிய துவக்க பள்ளி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் நாட்டு நலபணி திட்டத்தின் கீழ் தூய்மை பணி முகாம் நடைபெற்றது.

மேலும் இந்த முகாமினை பள்ளி தலைமையாசிரியர்கள் லீலாவதி மணிகண்டன் ஆகியோர் தூய்மை பணியை தொடங்கி வைத்தனர் பின்னர் ஊராட்சி ஓன்றிய துவக்க பள்ளி மேல்நிலைப்பள்ளி பின்புறத்தில் இருந்த குப்பைகளை நாட்டுநலப்பணி மாணவிகள் அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் கரகாட்ட பயிற்சி சிலம்பம் மரகன்று நடுதல் போன்ற பணிகளில் நாட்டுநலத் திட்டத்தின் கீழ் மாணவிகள் ஈடுபட்டனர். இதில் சமூக சேவகர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..