ஆரணியில்; விநாயகர் சிலை ஊர்வலம்; அசம்பாவிதங்களை தவிர்க்க எஸ்.பி தலைமையில் 300போலீசார் குவிப்பு.
கடந்த 18ந் தேதி இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடபட்டன.
அதே போல திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் பல்வேறு இடங்களில் வைத்துள்ள விநாயகர் சிலையை இன்று ஏரியில் கரைக்க விநாயகர் சிலை ஊர்வலம் நிகழ்ச்சி அண்ணா சிலை அருகில் இந்து முன்னனி மாவட்ட செயலாளர் தாமு தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக கோட்ட தலைவர் மகேஷ் பங்கேற்றார்.
இதில் பேண்டு வாத்தியம் முழுங்க கேரளா சண்ட மேளம் சிலம்பாட்டம்
மேளவாத்தியம் முழுங்கவும் சிவன் பார்வதி விநாயகர் ராம
இதில் பேண்டு வாத்தியம் முழுங்க கேரளா சண்ட மேளம் சிலம்பாட்டம் மேளவாத்தியம் முழுங்கவும் சிவன் பார்வதி விநாயகர் ராமர் உள்ளிட்ட சாமிகளின் வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர்.
மேலும் குதிரை வண்டியில் பாரதா மாத வேடமணிந்து பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பல்வேறு கலைநிகழ்ச்சியகள் நடைபெற்றது. பின்னர் அண்ணாசிலையிலிருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை ஊர்வலமாக காந்தி ரோடு மார்க்கெட் வீதி வழியாகவும் பெரிய கடை வீதி ஷராப் பஜார் சத்தியமூர்த்தி சாலை வழியாகவு விநாயகர் சிலை ஊர்வலமாக வந்தனர்
பின்னர் ஆரணி அருகே பையூர் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள பாறை குளத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட விநாயகர் சிலையை ஜேசிபி இயந்திரம் மூலம் கரைக்கபட்டது. இதில் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி கார்த்திக்கேயன் தலைமையில் ஏ.டி.எஸ்.பி உட்பட 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கபட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.