காந்தி ஜெயந்தி | தமிழக ஆளுநர், முதல்வர் ஸ்டாலின் மரியாதை.

காந்தி ஜெயந்தி | தமிழக ஆளுநர், முதல்வர் ஸ்டாலின் மரியாதை.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செவுத்தினர்.

நாடு முழுவதும் உத்தமர் காந்தியடிகளின் 155-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில், சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்..

இதைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, ராஜ கண்ணப்பன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், மகாத்மா காந்தியின் புகழைப் போற்றும் வகையில், அமைந்த பஜனைப் பாடல்களுடன் கூடிய இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை தமிழக ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து கேட்டனர்..

காந்தி ஜெயந்தியையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில், அவரது சிலைக்கும், உருவப்படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ம் தேதியான இன்று, கிராம சபைக் கூட்டங்களும் நடைபெற்று வருகிறது….

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..