திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஓண்ணுபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரையில் 10 மற்றும் 12ம் வகுப்பில் சுமார் 300 மாணவர்கள் பயின்று வந்துள்ளனர்.
2001-ம் ஆண்டு பயின்ற மாணவர்கள் தற்போது வெளிநாடுகளிலும் மும்பை பெங்களுர் டில்லி உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் மதுரை கோயம்புத்தூர் திருச்சி வெளிமாவட்டங்களில் அரசு பணிகளிலும் ராணுவத்திலும் பணிபுரிந்து வருகின்றனர்.
இதனையொடுத்து வாட்ஸ்-அப் குழு மூலம் கடந்த 2001-03-ம் ஆண்டு வரையில் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு பயின்ற சுமார் 300 மாணவர்கள் வாட்ஸ்-அப் குழு மூலம் ஓன்றுணைக்கும் பணியில் ஈடுபட்டு இன்று ஓண்ணுபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இதில் சுமார் 95 மாணவர்கள் ஓரே சீருடை அணிந்தும் 55 மாணவிகள் ஒரே கலரில் புடவை அணிந்து நிகழ்ச்சியில் சந்தித்து அன்பை பரிமாறி கொண்டனர். இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி சுமார் 15 ஆசிரியர்களில் காலில் விழுந்து அனைத்து முன்னாள் மாணவர்களும் ஆசி பெற்று நினைவு பரிசு வழங்கினார்கள். முன்னாள் மாணவர்கள் செல்பி மூலம் குரூப் குரூப்பாக செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர் 50ஆயிரம் மதிப்பீட்டில் டேபிள் ஓலி பெருக்கி உள்ளிட்ட உபகரணங்களை பள்ளி நிர்வாகத்திற்கு வழங்கினார்கள். பின்னர் கலைநிகழ்ச்சி பேச்சி போட்டி கவிதை போட்டியில் வெற்றி பெற்ற தற்போது பயிலும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கொண்டாடினார்கள். இதில் சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.