திருவண்ணாமலை மாவட்டத்தில் தெற்கு மேற்கு என 2பிரிவுகளாக பிரித்து தெற்கு மாவட்ட செயலாளராக அக்ரி.கிருஷ்ணமூர்த்தியும் வடக்கு மாவட்ட செயலாளராக தூசி.மோகன் என்பவரும் பதவி வகித்து வந்தனர்
மேலும் தற்போது மாவட்ட எல்லைகள் விரிவுபடுத்தி முக்கிய நிர்வாகிகளுக்கு பதவி வழங்கவும் 4 பிரிவுகளாக பிரித்து வந்தவாசி செய்யார் ஆகிய 2 தொகுதிகளுக்கு தூசி.மோகனும் ஆரணி போளுர் தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ ஜெயசுதாவும் கலசபாக்கம் செங்கம் ஆகிய 2 தொகுதிகளுக்கு எம்.எல்.எ அக்ரி.கிருஷ்ணமூர்த்தியும் திருவண்ணாமலை மற்றும் கீழ்பென்னாத்துர் முன்னாள் அமைச்சர் ராமசந்திரன் ஆகிய 4 பேரை நியமித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதனையொடுத்து இன்று ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரனை மாவட்ட செயலாளர் ஜெயசுதா மரியாதை நிமர்த்தமாக சந்தித்து ஆசி பெற்றார்.
உடன் நகர மன்ற துணை தலைவர் பாரிபாபு மாவட்ட பொருளாளர் கோவிந்தராசன் ஓன்றிய செயலாளர்கள் கஜேந்திரன் திருமால் நகர செயலாளர் அசோக்குமார் நகர மன்ற உறுப்பினர் மோகன் நகர மாணவரணி செயலாளர் குமரன் ஆகியோர் உடன் இருந்தனர்.