ஈரோடு மாவட்டம் சூரப்பட்டியை சேர்ந்தவர் சென்னியப்பன்(35) மருந்து விற்பனை பிரதிநிதி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கோகிலாவாணி(26) என்ற மனைவியும் 2 வயது இரட்டை குழந்தைகள் உள்ளன.
மேலும் கோகிலவாணிக்கு செல்போனில் ராங்கால் மூலம் மேட்டூரை சேர்ந்த கணேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இப்பழக்கம் கள்ளகாதலாக மாறியுள்ளன.
இந்த கள்ளகாதல் விவகாரத்தில் சென்னியப்பனுக்கு தெரிய வந்து கணவன் மனைவிக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளன. மேலும் சம்பவத்தன்று கணவன் மனைவி இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த சென்னியப்பன் அருகில் இருந்த கிரைண்டர் கல்லை கோகிலவாணியின் தலையில் போட்டு
தாக்கியுள்ளார்
இதில் நிலைகுலைலந்து சரரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே கோகிலவாணி துடிதுடித்து இறந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சென்னியப்பன் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மனைவி தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது…..