ஆரணியில் அரசால் தடை செய்யப்பட்ட ஹன்ஸ் குட்கா விற்ற 2கடைகளுக்கு சீல் வைத்து அபராதம் விதித்து உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

ஆரணியில் அரசால் தடை செய்யப்பட்ட ஹன்ஸ் குட்கா விற்ற 2கடைகளுக்கு சீல் வைத்து அபராதம் விதித்து உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யபட்ட ஹன்ஸ் மற்றும் குட்கா போன்ற போதை வஸ்துக்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கபட்ட தையொடுத்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சேகர் தலைமையில் உணவு துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது ஆரணி டவுன் கொசப்பாளையம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள பங்க் கடையில் தமிழக அரசால் தடைசெய்யபட்ட ஹன்ஸ் குட்கா போன்ற போதை வஸ்துக்களை விற்ற நடராஜன் சக்கரவர்த்தி ஆகியோரிடம் 4 ஆயிரம் மதிப்பிலான குட்கா ஹன்ஸ் உள்ளிட்ட போதை வஸ்துக்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து கடைகளை சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதில் ஆரணி டவுன் போலீசார் உடன் இருந்தனர்.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..