செய்யாறு அருகே பட்டாசு வெடித்ததில் நான்கு வயது சிறுமி மீது தீக்காயம் ஏற்பட்டு உடல் சிதறி சம்பவம் இடத்திலேயே உயிரிழப்பு காப்பாற்ற முயன்ற குழந்தையின் பெரியப்பாவிற்கு தீக்காயம்..
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பட்டாசு வெடித்ததில் நான்கு வயது சிறுமி மீது தீக்காயம் ஏற்பட்டு உடல் சிதறி சம்பவம் இடத்திலேயே உயிரிழப்பு காப்பாற்ற முயன்ற சிறுமியின் பெரியப்பாவிற்கு தீக்காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்..
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் கிராமம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் ஓட்டுநர் இவருடைய மனைவி அஸ்வினி இவர்களுக்கு ரவிஷ்கா என்ற நான்கு வயது சிறுமியும் ஒன்றரை வயது குழந்தையும் உள்ள நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு குடும்பத்துடன் குழந்தையின் பெரியப்பா விக்னேஷ் வீட்டில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர் அப்போது பட்டாசு வெடித்த போது ரமேஷின் மகள் ரவிஷ்கா நான்கு வயது சிறுமி குறுக்கே வந்துள்ளார் அப்போது பட்டாசு வெடித்ததில் குழந்தையின் உடல் சிதறி தீக்காயம் ஏற்பட்டது அருகில் சிறுமியின் பெரியப்பா விக்னேஷ் என்பவர் சிறுமியை காப்பாற்ற முயன்றார் அப்போது விக்னேஷின் கை விரல்கள் துண்டாகி தீக்காயம் ஏற்பட்டு விக்னேஷ் படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் நான்கு வயது சிறுமி மற்றும் அவரது பெரியப்பா விக்னேஷ் ஆகியோரை மீட்டு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி ரவிஷ்கா ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்..
இதை எடுத்து படுகாயம் அடைந்த விக்னேஷ் என்பவரை மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விபத்து குறித்து வாழப்பந்தல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு செய்யாறு சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்ததில் 15க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
செய்யார் அருகே தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்டு உடல் சிதறி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது…