சேலம் மாவட்டம் ஆவின் பால் கூட்டுறவு ஒன்றிய அலுவலகம் எதிரில் உழவர் பெருந்தலைவர் நாராயண சாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் வேலுச்சாமி தலைமையில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10ரூபாய் உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தமிழக அரசு ஆவின் நிர்வாகம் மூலம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து பசும் பால் 1லிட்டர் ரூபாய் 35க்கும் எருமை பால் 1லிட்டர் ரூ 44க்கும் கொள்முதல் செய்து வருகிறது.
தற்போது உள்ள விலைவாசி ஏற்றத்தில் இந்த கொள்முதல் விலை தங்கள் வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை என்று கூறி பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து தமிழக அரசு பால் கொள்முதல் விலையில் லிட்டருக்கு 3ரூபாய் உயர்த்தியது ஆனால் விலை உயர்வு தங்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும் எனவே தமிழக அரசுக்கு பால் லிட்டருக்கு 10ரூபாய் என்ற அளவில் கொள் முதல் விலையை உயர்த்தி பசும் பால் லிட்டருக்கு 45 ரூபாயாகவும் எருமை பால் லிட்டருக்கு 54ரூபாய்க்கும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயண சாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கோரிக்கை வைத்தார்,,.