திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயம் சங்க மாநில செய்தி தொடர்பாளர் விவசாயி வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த ஆர்hபாட்டத்தில் தமிழக அரசே மக்காசோளம் கொள்முதல் செய்து கால்நடைகளுக்கு வழங்கும் தீவன தொழிற்சாலை தொடங்கி கால்நடைகளுக்கு நிதி தேவையை மாநில பட்ஜெட்டில் மூலதன நிதி ஒதுக்க வேண்டும் என்று கூறி ஆரணி கோட்டாச்சியர் அலுவலகத்தில் அளிக்கும் மனுக்கள் தீர்வு ஏற்படாமல் மனு அளித்தவர்களை மாக்களாக்கி விட்டனர் (மாடுகள் ) போல ஆக்கிவிட்டதாகவும் கூறி மாடுகள் போன்று புண்ணாக்கு தவிடு ஆகியவையை விவசாயிகள் மண்டியிட்டு தின்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் எடுத்துரைத்தனர்.
பின்னர் கோட்டாச்சியர் அலுவலகத்தில் உதவி அலுவலர் தரணியிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். இதில் திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.