நாடு முழுவதும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வலியுறுத்தி மத்திய பாஜக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் விவசாயிகள் நீண்ட நாட்களாக பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
விவசாயிகள் எந்த போராட்டத்தையும் கண்டு கொள்ளாமல் பாஜக அரசு விவசாயிகளை ஒடுக்குவதிலேயே குறியாக உள்ளது.
எனவே விவசாயிகள் நலன் கருதியும் தங்களோடு துணை நிற்கவும் விவசாய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை எதிர்க்கட்சிகளை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் டெல்லியில் இரு அவைகளிலுருந்தும் வெளி நடப்பு செய்து அவை புறக்கணித்து விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று உழவர் பெருந்தலைவர் நாராயண சாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.