திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்தூர் அருகே முதலைமடூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி குப்பன் என்பவருக்கும் கள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தீபாவிற்கும் 24ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று திருமலை என்ற மகன் உள்ளார்.
பின்னர் குப்பன் தீபா தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து தனது மகனுடன் சொந்த ஊரான கள்ளத்தூர் கிராமத்தில் வசித்து கூலி வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்த தீபா அதே கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி (50) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு 5 ஆண்டு காலமாக தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனால் தீபாவின் உறவினர்கள் பலமுறை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் தீபா கடந்த மே மாதம் வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து தீபாவின் குடும்பத்தினர் கள்ளக்காதலன் ராமசாமிடம் சென்று தீபாவை காணவில்லை என்று கேட்டுள்ளனர் அதற்கு ராமசாமி எனக்கு தெரியாது என்று கூறி தீபா குடும்பத்தினருடன் சேர்ந்து ராமசாமியும் தீபாவை தேடி உள்ளார்.
பின்னர் தீபாவின் குடும்பத்தினருக்கு ராமசாமி மீது சந்தேகம் ஏற்பட்டு தீபாவின் தந்தை கோவிந்தசாமி திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எனது மகள் தீபா காணவில்லை என்று ஒரு புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் போலீசாருக்கு ஒரு கட்டத்தில் ராமசாமி மீது சந்தேகம் ஏற்பட போலீசார் ராமசாமியை நெருங்கி உள்ளனர்.
இதனை சுதாரித்துக் கொண்ட ராமசாமி தானாக முன்வந்து போளூர் நீதிமன்றத்தில் கள்ளகாதலி தீபாவை கொலை செய்ததாக நேற்று சரண்டைந்தார். பின்னர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ராமசாமியை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த போது ராமசாமி கூறியாதாவது : நானும் ( ராமசாமி) தீபாவும் 5 ஆண்டு காலமாக நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் பலமுறை தீபாவை அழைத்துக் கொண்டு மாம்பட்டிலுள்ள தனது விவசாய நிலத்தில் உல்லாசமாக இருந்துள்ளதாக ராமசாமி கூறினார்.
பின்னர் தீபா கூலி வேலை செய்வதற்காக பெங்களூரு சென்று தீபாவிற்கும் வேறு ஒரு நபருக்கும் தொடர்பு ஏற்பட்டதாகவும் அந்தத் தொடர்பு தனக்கு தெரிய வந்தவுடன் தீபாவிடம் கள்ளத்தொடர்பை துண்டித்துக் கொள்ளுமாறு கண்டித்தேன். ஆனால் அலட்சியமாக பதிலளித்தார். இதனால் கடந்த மே மாதம் தீபாவை அழைத்துக் கொண்டு ஆரணி அருகே எட்டிவாடி காப்பு காட்டில் அழைத்து சென்று நானும் தீபாவும் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்தோம்.
பின்னர் தீபாவிடம் மற்றொரு நபரிடம் உள்ள கள்ளக்காதலை முறித்துக் கொள்ளுமாறு வற்புறுத்தேன் அதற்கு தீபா மறுத்ததால் நான் தீபாவை கையில் இருந்த கை துண்டை கழுத்தில் இறுக்கி கொலை செய்து அடர்ந்த காப்பு காட்டில் விட்டு விட்டு நான் சென்றுவிட்டேன் என்று போலீஸ் காவலில் ராமசாமி கூறினார்.
பின்னர் களம்பூர் காவல் நிலைய போலீசார் ராமசாமியை எட்டிவாடி காப்புக்காட் டிற்கு அழைத்துக் கொண்டு சென்று கொலை செய்து சடலத்தை மறைத்து வைத்திருந்த இடத்தை அடையாளம் காட்டினார். பின்பு தீபாவின் சடலத்தை எலும்பு கூடாக போலீசார் மீட்டனர்.
பிரேதத்தை திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சுகன்சுந்தர் தலைமையில் மருத்துவ குழுவினர் எட்டுவாடி காப்புக்காட்டிற்கு வந்து பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் களம்பூர் காவல் நிலைய போலீசார் ராமசாமியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்..