திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தச்சூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1999-2000ம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இன்று தச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மாணவர்கள் தனது குடும்பத்துடன் பங்கேற்று பழைய நினைவுகளை பகிர்த்து கொண்டு ஓருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொண்டனர்.
பின்னர் தாங்கள் படித்த போது கற்று கொடுத்த ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து குடும்பத்துடன் ஆசிர்வாதம் வணங்கி மரியாதை செலுத்தினர். பின்னர் சுமார் 25ஆயிரம் மதிப்பிலான பீரோவை பழைய மாணவர்கள் பள்ளிக்கு தலைமையாசிரியர் வெங்கடேசனிடம் வழங்கினார்கள். இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.