2 1/2 ஆண்டு ஓருமுறை சனிபெயர்ச்சி மாறுவதை ஆரணி அருகே யந்திர சனீஸ்வரஆலயத்தில் சனிபெயர்ச்சி லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

2 1/2 ஆண்டு ஓருமுறை சனிபெயர்ச்சி மாறுவதை ஆரணி அருகே யந்திர சனீஸ்வரஆலயத்தில் சனிபெயர்ச்சி லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

15ம் நூற்றாண்டு அக்காலத்து அரசர்கள் சனீஸ்வர பகவான் ஆலயத்தை நிறுவி வழிபட்டு வந்தனர். கால போக்கில் சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வழிபாடுகளும்
பயன்பாட்டியின்றி இருந்துள்ளன.

2000ம் ஆண்டில் இந்த சனீஸ்வர பகவான் ஆலயத்தை ஆரணி அடுத்த ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள பொதுமக்களே யந்திர சனீஸ்வர பகவான் ஆலயத்தை நிறுவி
வழிபட்டு வந்தனர்.

மேலும் நாளடைவில் சக்தி வாய்ந்தவையாக இந்த ஆலயம் ஆரணி சுற்றியுள்ள பகுதியில் உள்ள பக்தர்களுக்கு தெரிந்த நிலையில் நாளுக்கு நாள் சனீஸ்வரன் பகவான் ஆலயத்திற்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வந்தன. இதனால் ஏரிக்குப்பம் கிராமத்திற்கு சனிக்கிழமை தோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கபட்டன..

மேலும் இந்த ஆலயத்தில் எங்கும் காணாத வகையில் காகம் கொண்டு சனீஸ்வரர் இருப்பதால் இதனை யந்திர சனீஸ்வர பகவான் என்று கூறப்படுகின்றன. பாண்டிச்சேரி அடுத்த திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வழிபட்டால் கிடைக்கும் மோட்சங்களும் நன்மைகளும் குருபலன்களும் ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வர ஆலயத்தில் வழிபட்டலே கிடைப்பதாக பக்தர்களின் ஐதீகமாக உள்ளன. பில்லி சூனியம் ஜாதகபடி நேரம் சரியில்லாத பக்தர்கள் இந்த ஆலயத்தில் வழிபட்டு தரிசனம் செய்தால் தீமைகள் அண்டாதவாறு நன்மைகள் நடைபெறும் என்று பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளன.

மேலும் நாளடைவில் யந்திர சனீஸ்வரர் பகவான் பிரசித்த பெற்று வந்துள்ளதால் 2004ம் ஆண்டிற்கு பிறகு தமிழக இந்து சமய அறநிலை துறை கட்டுபாட்டில் வந்தன. இதனையொடுத்து தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் கல்வெட்டுகளை கண்டெடுத்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். கண்டெடுக்கபட்ட கல்வெட்டுகளில் உள்ள மந்திரத்தை கொண்டு இந்த ஆலயத்தில் வழிபட்டு வருகின்றனர்..

இந்த ஆலயத்தில் சனிஸ்வர பகவானை வழிபட ஆரணி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் வெளிமாநில வெளிமாவட்டத்திலிருந்தும் சுமார் 2லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சனீஸ்வர பகவானை வழிபட்டு வருகின்றனர்…

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..