திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதியில் குட்கா ஹன்ஸ் போன்ற போதை வஸ்துக்கள் விற்பனை செய்யபட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கபட்டுள்ளன.
மேலும் இது சம்மந்தமாக ஆரணி அருகே வடுகசாத்து அரையாளம் கிராமத்தில் தமிழக\ அரசால் தடை செய்யபட்ட ஹன்ஸ் குட்கா போன்றவற்றை விற்பனை செய்யபட்ட போதை வஸ்துக்களை பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் ஆரணி டவுன் போலீஸ் ஸ்டேசன் வளாகத்தில் நடைபெற்ற வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார் டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் வகித்தார்.
இதில் மொத்த வியாபாரிகள் மளிகை கடை வியாபாரிகள் சிறு குறு வியாபாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் டி.எஸ்.பி ரவிசந்திரன் ரவிசந்திரன் பேசியதாவது தமிழக அரசால் தடை செய்யபட்ட ஹன்ஸ் குட்கா போன்ற போதை வஸ்துக்களை வியாபாரிகள் விற்பனை செய்யபட்டால் 7ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கபடும்.
அதே போல மற்றவர்களை விற்பனை செய்யபட்டால் 10581 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும் வியாபாரிகளை டி.எஸ்.பி ரவிசந்திரன் அறிவுறுத்தினார். இதில் திரளான வியாபாரிகள் பங்கேற்றனர்.