அதிமுக ஆட்சியில் ஒதுக்கிய நிதியை போன்று திமுக ஆட்சியில் நிதி ஓதுக்கீடு – ஆரணி தொகுதியில் திமுக அதிமுக மல்லுகட்டு

அதிமுக ஆட்சியில் ஒதுக்கிய நிதியை போன்று திமுக ஆட்சியில் நிதி ஓதுக்கீடு – ஆரணி தொகுதியில் திமுக அதிமுக மல்லுகட்டு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதிக்குபட்ட 500க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த திருக்கோவில்கள் உள்ளன. இந்த திருக்கோவில்களில் திருப்பணி செய்யவும் புனரமைப்பு மற்றும் பல்வேறு பணிகள் செய்ய நிதி ஒதுக்க வேண்டும் என்று கிராம பொதுமக்களின் நீண்ட நாட்களின் கோரிக்கையாக இருந்தன.

கடந்த 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஆரணி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த சேவூர் ராமச்சந்திரனை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக இந்து சமய அறநிலை துறை அமைச்சராக அறிவித்தார். 2016 முதல் 2021 5 ஆண்டு அதிமுக ஆட்சியில் இந்து அறநிலைத்துறை அமைச்சராக இருந்த சேவூர் ராமச்சந்திரன் ஆரணி சட்டமன்ற தொகுதிக்குபட்ட  திருக்கோவில்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கினார்..

மேலும் தேவிகாபுரம் பெரியநாயகி உடனுறை கனகஸ்வரர் கோவில் காமக்கூர் சந்திரசேகர் சுவாமி கோவில் கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவில் ஆரணி கைலாசநாதர் திருக்கோவில் ஆகிய நிதி ஓதுக்கி கோவிலுக்கு புதிய தேர் வழங்கப்பட்டன. அதே போல ஆரணி டவுன் புதுகாம்பூரில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரர்  ஆலயத்திற்கு 2 கோடி மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டிடம் கட்டபட்டன.  ஆரணி சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள ஆலயங்களுக்கு திருப்பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டது…

அதன் பின்பு 2021 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக இந்து அறநிலை துறை அமைச்சராக திமுகவை சேர்ந்த துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  சேகர்பாபு பதவி ஏற்றார்.   இதனையடுத்து ஆரணி சட்டமன்ற தொகுதிக்குபட்ட திமுக நிர்வாகிகள் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபுவிடம்  ஆரணி தொகுதியில் உள்ள கோவில்களுக்கு திருப்பணிக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். 

இதனால் கடந்த வாரம் தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்து சமய அறநிலைத்துறை மானிய  கோரிக்கையின் போது அமைச்சர் சேகர்பாபு ஆரணி சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு நிதி ஒதுக்கி அதிமுக ஆட்சியில் மட்டும் அதிகளவில் நிதி ஒதுக்கிய போல் திமுக திராவிட ஆட்சியிலும் கோவில்களுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளோம் என்று திமுகவினர் மார்தட்டி வருகின்றனர்

இந்து அறநிலைத்துறை மானிய கோரிக்கையில் ஆரணி 

சட்டமன்றத் தொகுதியில் உள்ள பல கோவில்களுக்கு அமைச்சர் சேகர்பாபு நிதி ஒதுக்கிய விவரங்கள்

1.ஆரணி சட்டமன்றத் தொகுதி முனுகப்பட்டு கிராமத்தில் உள்ள பச்சையம்மன் ஆலயத்திற்கு திருப்பணி செய்ய 1.05 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

2.ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல்சீசமங்கலம் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலுக்கு திருப்பணி செய்ய 45 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது

3.ஆரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விண்ணமங்கலம் கிராமத்தில் மஞ்சியம்மன் ஆலயத்திற்கு புதிய தேர் செய்ய 85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன

4.ஆரணி அருகே தச்சூர் பீட்சீசுவரர் திருக்கோவிலுக்கு புதிய தேர் செய்ய ரூபாய் 80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

5.ஆரணி அருகே சிறுமூர் கிராமத்தில் தேர் கொட்டகை அமைக்க 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

6.ஆரணி அருகே சத்திய விஜய நகர கிராமத்தில் சீனிவாச பெருமாள் திருக்கோவில் முத்து மாரியம்மன் திருக்கோவில் மற்றும் திருக்காமேஸ்வரர் திருக்கோவில் ஆகிய மூன்று திருக்கோவில்களில் திருப்பணி செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

7.ஆரணி அருகே குன்னத்தூர் கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் மற்றும் சுந்தர விநாயகர் ஆலயத்திற்கு திருப்பணி செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

8.ஆரணி டவுன் அருணகிரி சத்திரம் பகுதியில் உள்ள அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு திருப்பணி செய்ய 30 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

9.ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சிக்குபட்ட பழங்காமூர் கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு திருப்பணி செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

10 .ஆரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடுக்கனூர் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் திருக்கோவிலுக்கு திருப்பணி செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

11. ஆரணி டவுன் சீனிவாசன் தெருவில் உள்ள திருநாவுக்கரசர் மடத்தை சீரமைக்க 30 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது  
உள்ளிட்ட 14 கோவில்களுக்கு 6கோடி ரூபாய் அளவில் நிதி ஓதுக்கபட்டுள்ளன. 

அதிமுக ஆட்சியில் ஆரணி தொகுதிக்குபட்ட கோவில்களில் இந்து சமய அறநிலை துறையில் ஒதுக்கிய நிதியை போன்று திமுக ஆட்சியிலும் கோவில்களுக்கு ஓதுக்கியதால் ஆரணி தொகுதியில் திமுக அதிமுகவினர் சமூக வளைதலங்களில் மல்லுகட்டு சூடுபிடித்துள்ளன.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..