திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மொட்டை அடித்து பாடை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் வந்தவாசி தலித் மக்களின் அடிப்படைத் தேவைகளை புறக்கணிக்கும் வந்தவாசி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வந்தவாசி நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது இரண்டாவது வார்டு உறுப்பினர் ஷீலா இவரது கணவர் மூவேந்தர் என்பவர் நகராட்சி வாயில் அமர்ந்து மொட்டை அடித்துக் கொண்டு பழைய பேருந்து நிலையம் அருகே இருந்து பாடை கட்டி தோளில் சுமந்தவாறு ஊர்வலமாக சென்று நகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அப்போது ஆறு சமுதாய மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டு பாதையை சீரமைத்து தர வேண்டும் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் அதேபோல் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது அதை கட்டுப்படுத்த வேண்டும் பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் துர்நாற்றம் வீசும் அளவிற்கு பொதுக் கழிப்பிடத்தை முறையாக சீர் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.